எல்லீசன் கல்வெட்டு
-------------------------------
பாரெலா நிழற்று பரியரிக் குடையோன்
-------------------------------
பாரெலா நிழற்று பரியரிக் குடையோன்
வாரியுஞ் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடலதிர
வார்த்திடுங் கப்பலோன்
மரக்கல
வாழ்வின் மற்றொப்பிலாதோன்
தனிப்பெருங்
கடற்குத் தானே நாயகன்
தீவுகள்
பலவும் திதி பெறப் புரப்போன்
தன்னடி நிழலிற் றங்கு பல்லுயிர்க்குந்
தாயிலு
மினியன் றந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்
டுயர்செங்
கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை
யொழுக்கம் வீடுறா தளிப்போன்
பிரிதன்னிய சுகோத்திய விபானியமென்னு
மும்முடி
தரித்து முடிவி லாத
திக்கனைத் துந்தனிச் சக்கர நடாத்தி
யொருவழிப்
பட்ட வொருமை யாளன்
வீர
சிங்கா தனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென் னுமூன்றா மரசற்கு 57ஆம் ஆண்டில்
காலமுங்
கருவியுங் கருமமுஞ் சூழ்ந்து
வென்றியோடு
பொருள்புகழ் மேன்மேற் பெற்று
கும்பினியார் கீழ்ப்பட்ட கனம்பொ ருந்திய
யூவெலயத்
தென்பவ னாண்ட வனாக
சேர
சோழ பாண்டி யாந்திரங்
கலிங்க துளுவ கன்னாட கேரளம்
பணிக்கொடு
துரைத்தனம் பண்ணுநாளில்
சயங்கொண்ட
தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடன்
முதலாக குட கடலளவு
நெடுநிலம்
தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார
காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப்
புலமைத் திருவள் ளுவனார்
திருக்குறள்
தன்னில் திருவுளம் பற்றிய்
“இருபுனலும் வாய்ந்த
மலையும் வருபுனலும்
வல்லரணும்
நாட்டிற் குறுப்பு”
என்பதின்
பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஶ்ரீ ஶாலிவாஹந ஶகாப்த ௵ 1740ச் செல்லாநின்ற இங்க்லிஸ் ௵
1818ம் ஆண்டில் ப்ரபவாதி ௵-ம்க்கு மேற் செல்லாநின்ற பஹுதாந்ய ௵-த்தில் வார திதி நக்ஷத்ர
யோக கரணம் பார்த்து ஶுப திநத்தி லிதனோடி ருபத்தேழு துரவு கண்டு புண்ணியாஹவாசநம் பண்ணுவித்தேன்
1818
0 comments:
Post a Comment